Sbs Tamil - Sbs

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • Are you eligible for the Higher Education Loan Program? - உயர் கல்விக் கடன் திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா?

    04/03/2024 Duration: 10min

    Around three million Australians have a government loan through HELP, the Higher Education Loan Program. You too may be eligible to defer your tertiary tuition fees until you secure a job. - சுமார் மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உயர் கல்விக் கடன் திட்டம் HELP என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கக் கடனைப் பெற்றுள்ளனர். HELP கடன் திட்டம் குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • NSW மாநிலத்தில் அரியதொரு குடும்பம்!!

    04/03/2024 Duration: 02min

    Sana மற்றும் Bill Soliola தங்களது அடுத்த குழந்தையின் வரவை எதிர்பார்த்துள்ளனர். சிட்னி Lidcombe பகுதியில் வசிக்கும் இவர்களின் குடும்பம் ஒரு அரியதொரு குடும்பமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • World Tamil Research Conference: Advocating for Unity - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டுபடக்கூடாது!

    04/03/2024 Duration: 06min

    The World Tamil Research Conference stands as a beacon of unity among Tamil scholars worldwide, striving to concentrate and enrich research efforts pertaining to the Tamil language. Initiated in 1964 by Reverend Xavier S. Thani Nayagam, the International Association of Tamil Research (IATR) decided to convene this global gathering biennially. - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

  • இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்!!

    04/03/2024 Duration: 08min

    மக்களவைத் தேர்தல் வேலைகளில் முந்தும் பாஜக - 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது, பெங்களூரு ஓட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பு, `தாமரை' சின்னம் - பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே மோதல் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டில் திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே சிக்கல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  • A threat to national security? - நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

    04/03/2024 Duration: 10min

    The annual threat assessment presented by Mike Burgess, the Chief of the Australian Security and Intelligence Organisation (ASIO), has sparked considerable controversy by suggesting the potential involvement of a former politician in a spy conspiracy. - ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ASIO அதிபர் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டில், முன்னாள் அரசியல்வாதி ஒருவர் உளவாளிகளின் சதி வலையில் விழ இருந்ததாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அது குறித்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

  • Dunkley இடைத்தேர்தலில் லேபர் வெற்றி : ஆனால் லிபரல் கட்சியும் உற்சாகம்!!

    04/03/2024 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Navigating Common Ear Issues: Understanding Challenges and Finding Solutions - காது தொடர்பாக ஒருவருக்கு என்ன பிரச்சனை ஏற்படலாம்? தீர்வு என்ன?

    03/03/2024 Duration: 12min

    World Hearing Day is observed on 3rd March. Audiologists present information related to hearing problems and their solutions. An experienced audiologist with over 13 years of global expertise, who is also the co-founder of Audience Hearing in Sydney, Australia, explains the importance of audiology services for maintaining healthy hearing to RaySel. - காது நலம் தொடர்பான உலக விழிப்புணர்வு தினம் (World Hearing Day) ஞாயிறு (3 மார்ச்) அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் காது தொடர்பான பல தகவல்களையும், காது பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆடியோலஜிஸ்ட் முஸ்தபா அவர்கள். 13 ஆண்டுகால உலகளாவிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவம் வாய்ந்த ஆடியோலஜிஸ்ட்டாக பணியாற்றும் அவர், சிட்னியில் இயங்கும் Audience Hearing in Australiaவின் இணை நிறுவனர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • Interview with Super Singer fame, playback singer Rakshita Suresh - சிட்னியில் முதன்முறையாக Super Singer புகழ் பாடகி ரக்க்ஷிதா சுரேஷ்

    02/03/2024 Duration: 04min

    Rakshita Suresh is one of the Indian playback singers known for her work in Tamil, Hindi, Kannada and Telugu cinema. She was the winner on Rhythm Tadheem aired on ETV Kannada and title winner of "Little Star Singer" 2009 aired on Asianet Suvarna (Kannada). She is the first runner up in the reality show of Super Singer 6 aired on Star Vijay (Tamil) in 2018. Segment produced by Praba Maheswaran. - முதல் முறையாக சிட்னி வருகைதரும் பின்னணிப் பாடகி Super Singer புகழ் ரக்க்ஷிதா சுரேஷ் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Interview with Sa Re Ga Ma Pa Singer Bavathayini Nagarajan - ஈழத்துப் பின்னணியுடைய சரிகமப புகழ் பாடகி பவதாயினி

    02/03/2024 Duration: 09min

    Bavathayini Nagarajan is a singer from the Kollywood Music Industry in India. She has given a kick start to her career by giving auditions in SaReGaMaPa, season 3. She is from Vannarpannai, Sri Lanka., living in Chennai. Bavathayini has created a beautiful journey in this TV show broadcasted on ZeeTamil. She will be visiting Sydney 2nd time, this time to the Jaffna Vembadi OGA's Music Show. Segment produced by Praba Maheswaran. - சிட்னி வருகைதரும் ஈழத்துப் பின்னணியுடைய சரிகமப புகழ் பாடகி பவதாயினி இனிய பாடல்களுடன் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    02/03/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 2 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Interview with Super Singer fame, playback singer Sathyaprakash - பிரபல பின்னணிப் பாடகர் Super Singer புகழ் சத்யப்பிரகாஷ்

    01/03/2024 Duration: 07min

    Sathyaprakash is a playback singer, stage performer & carnatic vocalist known in the music fraternity for his hits in movies, independent albums and on-stage performances. He is the voice behind the song Aalaporaan Tamizhan (Mersal) and several other chartbuster Tamil hit songs like Raasali (Achcham Enbadhu Madamaiyada), Nallai Allai (Kaatru Veliyidai), Ammadi Un Azhagu (Vellakaara Durai) and so on. He is based in Chennai – performing classical/fusion concerts. Segment produced by Praba Maheswaran. - சிட்னி வருகைதரும் பின்னணிப் பாடகர் Super Singer புகழ் சத்யப்பிரகாஷ் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    01/03/2024 Duration: 08min

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விடயங்களும் இங்கு பேசப்படவுள்ளது. இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை இரு தரப்பிலும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. ஊதிய உயர்வு கோரி பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கடந்த இரு நாட்கள் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • பிலிப்பைன்ஸ் நாட்டுடன் புதிய ஒப்பந்தம்

    01/03/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/03/2024) செய்தி.

  • All eyes on the Dunkley by-election in federal politics - மெல்பனிலுள்ள Dunkley இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?

    29/02/2024 Duration: 11min

    With less than a day left before a by-election is held in the Melbourne seat of Dunkley, both Peter Dutton and Anthony Albanese are making their final pitches. The high stakes by-election in Melbourne's outer suburbs could have concerning outcomes for both Liberal and Labor moving forward. Navaratnam Raguram, a broadcaster in Sydney explains. Segment produced by Praba Maheswaran. - மெல்பனிலுள்ள ஒரு தேர்தல்தொகுதியான Dunkleyயில் வருகிற சனிக்கிழமை, மார்ச் மாதம் 2ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பீட்டர் டட்டன் மற்றும் அந்தோனி அல்பானீஸ் ஆகிய இருவரும் தத்தமது இறுதிநேரப் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். லிபரல் மற்றும் லேபர் ஆகிய இரு கட்சிகளுக்கும் இத் தேர்தல் முக்கியமாதொன்றாகப் நோக்கப்படுகிறது. இத்தேர்தல் குறித்த பின்னணி, இருகட்சிகளுக்குமான இத்தேர்தலின் முக்கியத்துவம் போன்ற பல விடயங்களை அலசுகிறார் அரசியல் அவதானியும் வானொலியாளருமான நவரட்ணம் ரகுராம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மெல்பன் புறநகர் ஒன்றில் கொட்டப்படும் குப்பைகள் - அகற்ற பாரிய அளவில் செலவு

    29/02/2024 Duration: 02min

    மெல்பன் புறநகர் ஒன்றில் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பைகளை அகற்ற உள்ளூர் நகரசபைக்கு மில்லியன் கணக்கில் செலவாவதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Are you eligible for this grant to upgrade your equipment? - உபகரணங்களை மேம்படுத்த இந்த மானியத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவரா?

    29/02/2024 Duration: 07min

    A federal government grant of up to $25,000 has been introduced to fund the purchase of energy-efficient equipment or upgrades for small and medium businesses. - சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், மேலதிக ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்களை வாங்குவதற்கு 25,000 டொலர்கள் வரை மானியத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Anyone can learn Tamil in 30 days… a proven way - தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்

    29/02/2024 Duration: 14min

    Pollaachchi Nasan is a zoologist and a retired educational officer. Having seen how the current system of teaching Tamil as a language is failing to attract and engage students, Mr Nasan has deviced a new way of teaching – which seems to work in America and in Australia. - தமிழ் வளர்ச்சியில் தீராத தாகம் கொண்ட திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்க் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருபவர்.

  • Story of our nation – Part6: Australia between two World Wars - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்6: இரண்டு உலகப் போர்களுக்கிடையில் ஆஸ்திரேலியா

    29/02/2024 Duration: 08min

    We are bringing the story of Australian political history in ten parts. In the sixth episode of this series, we explore the Australian political landscape during the time between two World Wars. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஆறாம் பாகத்தில், இரண்டு உலகப் போர்களுக்கிடையில் ஆஸ்திரேலியா எப்படியான அரசியல் சூழலில் இருந்தது என்பது குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Savings all gone? You're not alone and it's intentional, says economist - உங்கள் சேமிப்பு அனைத்தும் தீர்ந்துவிட்டதா? காரணம் தெரியுமா?

    29/02/2024 Duration: 08min

    If you've been struggling to put any money into savings, you're not alone. The Australian household savings ratio has hit a 17-year low, with just 1.1% of disposable income being saved. - நீங்கள் சேமித்த பணம் என்று உங்களிடம் எதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு மட்டும்தான் அந்த நிலை என்று எண்ண வேண்டாம். நாட்டில் மக்கள் சேமிக்கும் தொகை கடந்த 17 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு என்றும் வருமானத்தில் 1.1% மட்டுமே சேமிக்கப்படுகிறது என்றும் தரவுகள் சொல்கின்றன.

  • Housing Crisis - Is joint family a solution? - வீட்டுப் பிரச்சனைக்கு, கூட்டுக் குடும்பம் ஒரு தீர்வா?

    29/02/2024 Duration: 11min

    A new study suggests that one in ten have moved back to live with their parents in the past 12 months, because living by themselves is increasingly becoming unaffordable. Kulasegaram Sanchayan brings the story with comments from Associate Professor Selvaraj Velayutham, Macquarie School of Social Sciences at Macquarie University. - கடந்த 12 மாதங்களில், தனியாக வாழ்வது கட்டுப்படியாகாது என்று பெற்றோருடன் வாழ்வதற்காகப் பத்தில் ஒருவர் திரும்பிச் சென்றுள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது, இது குறித்த செய்தியின் பின்னணியை Macquarie பல்கலைக் கழகத்தில், Macquarie School of Social Sciences துறையில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றும் செல்வராஜ் வேலாயுதம் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

page 11 from 25