Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
Negative gearing & Capital gain tax-இல் மாற்றம் வீட்டுப் பற்றாக்குறையை தீர்க்குமா?
07/10/2024 Duration: 09minஆஸ்திரேலியாவின் வீட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பன்முக அணுகுமுறை தேவை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். Negative gearing சீர்திருத்தங்கள் மற்றும் Capital gain tax தள்ளுபடி ஆகியவை அதன் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? இது குறித்து ஒரு மாதிரியை உருவாக்குமாறு கருவூலக்காப்பகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
காசா போரின் ஓராண்டு நினைவு தினம் - நாடு முழுவதும் விழிப்புணர்வு கூட்டங்கள்!
07/10/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 07/10/2024) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
சிட்னி,மெல்பன்,பிரிஸ்பேன் & அடிலெய்ட் நகரங்களில் உரையாற்ற வருகிறார் சித்த மருத்துவர் சிவராமன்
06/10/2024 Duration: 17minதமிழகத்தின் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது எழுத்தாளர் மற்றும் பேச்சாளருமான கு.சிவாராமன் அவர்கள் விரைவில் சிட்னி, மெல்பன், பிரிஸ்பேன் மற்றும் அடிலைட் நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். அவரது ஆஸ்திரேலிய பயணம் உட்பட இன்னும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம். சிவராமன் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
-
Thinking of installing solar panels? Here's what you need to know - Solar panels-ஐ நிறுவ திட்டமிடுகிறீர்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
05/10/2024 Duration: 07minAustralia's warm climate offers an abundant supply of solar energy year-round, making solar power an increasingly significant contributor to the nation's electricity supply. Learn what the requirements are for installing solar power systems in your home. - சூரிய மின்னாற்றல் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மின்சார விநியோகத்தில் முக்கிய பங்காளி ஆகியுள்ளது. இந்நிலையில் உங்கள் வீட்டில் சோலார் அமைப்பை நிறுவுவது எப்படி என்பது தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இந்த வார முக்கிய செய்திகள்
05/10/2024 Duration: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 05 அக்டோபர் 2024 சனிக்கிழமை.
-
நாட்டில் எந்த suburbs-ஐச் சேர்ந்தவர்களை மோசடிக்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர்?
04/10/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகளில் ஒன்றால் தொகுக்கப்பட்ட புதிய தரவு, நாட்டில் எந்த suburb-களில் உள்ளவர்கள் அதிகளவில் மோசடிகளுக்கு இலக்காகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
யாழ் குடாநாட்டில் குழாய்க்கிணறுகள் பொறுப்பின்றி தோண்டப்படுகிறதா?
04/10/2024 Duration: 14minஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு ஐரோப்பா சென்று, தற்போது சுவீடன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலின் நிறைவுப் பகுதி.
-
கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்
04/10/2024 Duration: 08minசெய்தியின் பின்னணியில் தொடர்வது, கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்.
-
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி உதவிபெறலாம்?
04/10/2024 Duration: 16minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் இரண்டாவது பாகம் இது. இந்நிகழ்ச்சியில் குடும்ப வன்முறை குறித்து விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“தெற்கு லெபனானை விட்டு உடனே வெளியேறவும்” –மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!
04/10/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 04/10/2024) செய்தி.
-
யாழ்ப்பாண நண்பர்கள் உலகத்திற்கே உணவூட்ட வழி செய்கிறார்கள்
03/10/2024 Duration: 12minஇந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும், விவசாயம் இன்றும் பாரம்பரிய வழி முறையைப் பின்பற்றித் தான் நடக்கிறது. புவி வெப்பமயமாகி வரும் போது, உலக மக்கள் அனைவருக்கும் எப்படி உணவு வழங்க முடியும் என்றும், வளங்களை எப்படி திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் பலரும் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், சில தமிழ் இளைஞர்கள் தங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அவர்களில், மில்லர் அலெக்ஸாண்டர் ராஜேந்திரன் மற்றும் ஜெயெந்தன் ஆகிய இருவரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
சமூக வலைத்தளங்களும் இளைஞர்களும்
03/10/2024 Duration: 13minபொழுது போக்காக பாவிக்க ஆரம்பித்த சமூக வலைத்தளங்கள் சில தற்போது நம்மை ஆக்ரமித்து வளர்ந்து நிற்கின்றன. வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இளைஞர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்களை விவரிக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
-
தாயின் உடல் பருமன் குழந்தையை எவ்வாறு பாதிக்கிறது?
03/10/2024 Duration: 10minதாய்மார்கள் கர்ப்பமுற்றிருக்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ, அவர்களது உடல் பருமனாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தன்மை உள்ளிட்ட நரம்பியல் மனநல மற்றும் நடத்தை நிலைமைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
-
நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மையம் தேவை - அழைப்பு வலுக்கிறது!
03/10/2024 Duration: 06minஆஸ்திரேலியாவில் நோய்க் கட்டுப்பாட்டுக்கான நிரந்தர மற்றும் சுயாதீனமான மையம் தேவை என்று சுகாதார வல்லுநர்கள் அரசிற்கு அழைப்பு விடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தொற்றுநோய் பதிலளிப்பு குறித்த சுயாதீன விசாரணையின் இறுதி அறிக்கை இந்த மாதம் 25ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த வலியுறுத்தல்கள் வெளி வந்துள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Sam Dover எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
சொந்த அரசியல் கட்சி தொடங்குகிறார் செனட்டர் ஃபாத்திமா பேமன்!
03/10/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 03/10/2024) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
நாட்டில் வசந்தகாலம்: Magpies தாக்குதல்கள், விழிப்புடன் இருங்கள்
02/10/2024 Duration: 07minஆஸ்திரேலியாவில் வசந்த காலம் ஆரம்பித்துள்ளது. அத்துடன் இது மாக்பை பறவைகளின் இனப்பெருக்கக் காலமாகவும் காணப்படுகிறது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்கவும், அமைதியாக இருக்கவும், பறவைகளின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்யவும் என அறிவுறுத்தப்பட்டுளார்கள். இதுபற்றி Omoh Bello தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Spring time in Australia represents more than just blooming flowers, it also brings with it swooping season for magpies. Some magpies can be fierce defenders of their territory. Experts are advising people to be aware, stay calm and even try to gain the trust of the birds as ..... reports.
-
2024: ஆஸ்திரேலியாவின் சக்திவாய்ந்த 10 நபர்கள்
02/10/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் சக்திவாய்ந்த நபர்கள் குறித்த தனது வருடாந்திர பட்டியலை The Australian Financial Review சஞ்சிகை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நாட்டின் அதிசக்தி வாய்ந்த 10 நபர்கள் யாரென்ற பட்டியலைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியா முழுவதும் mpox வைரஸ் தொற்று அதிகரிப்பு!
02/10/2024 Duration: 02minகடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சில பகுதிகளில் mpox தொற்று அதிகமாக பரவி வருகிறபோதிலும் ஆஸ்திரேலியாவில் இதன் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. இப்போது, ஆஸ்திரேலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அமெரிக்காவிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஆஸ்திரேலியா! பின்னணி என்ன?
02/10/2024 Duration: 08minஆஸ்திரேலியாவில் மின் வாகனங்கள் உட்பட சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்பதான கூற்றை நஷனல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Barnaby Joyce தெரிவித்திருந்தார். அவரது கூற்றின் பின்னணி தொடர்பிலும் அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதன் பின்னணி தொடர்பிலும் பாதுகாப்புபடைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மலைகள் ஆறுகள் இல்லாத யாழ் குடா நாட்டில் நீர் இருக்குமா?
02/10/2024 Duration: 15minஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு ஐரோப்பா சென்று, தற்போது சுவீடன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலின் முதல் பகுதி.