Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
மாணவர் விசாவில் வருபவர்கள் தங்களின் குடும்பத்தை அழைத்து வர முடியுமா?
23/09/2024 Duration: 11minமாணவர் விசாவில் இங்கு வருபவர்கள் தங்களின் குடும்பத்தை எவ்வாறு அழைத்து வருவது? அதில் உள்ள நடைமுறை என்ன? மேலும் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் கல்வி கற்று முடித்த பின் அவர்களுக்கு இங்குள்ள வாய்ப்புகள் யாவை? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இந்த வார முக்கிய செய்திகள்
21/09/2024 Duration: 06minஇந்த வார முக்கிய செய்திகள்: 21 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.
-
NSW மாநில ரயில் பயணிகள் இந்த வார இறுதியில் இலவசமாக பயணம் செய்யலாம்
20/09/2024 Duration: 02minஇந்த வார இறுதியில் அதாவது செப்டம்பர் 21 மற்றும் 22ம் திகதிகளில் Sydney Trains, NSW TrainLink, Airport Link மற்றும் Sydney Metro மூலம் இயக்கப்படும் அனைத்து Opal network சேவைகளிலும் ரயில் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியது
20/09/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இப்போது 27 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செப்டம்பர் 21: உலக அமைதி நாள் (International Day of Peace)
20/09/2024 Duration: 17minஉலக அமைதி நாள் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது. அமைதி கலாச்சாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் 25வது ஆண்டு இந்த வருடம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Understanding shared housing in Australia - மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை
20/09/2024 Duration: 07minShared housing is becoming increasingly popular in Australia, as more people look to reduce rental costs. So, what key factors should you consider when searching for shared accommodation, and how can you avoid potential scams? - வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், அதிகமான மக்கள் shared housing- பகிரப்படும் வீடுகளை நாடுகின்றனர். இப்படியாக மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்
20/09/2024 Duration: 09minகடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்.
-
“தகவல் தொடர்பு சாதன வெடிப்புகள் வரம்பு மீறிவிட்டன! பதிலடி கொடுக்கப்படும்” - ஹெஸ்புல்லா
20/09/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/09/2024) செய்தி.
-
2050இல் டிமென்ஷியாவின் எண்ணிக்கை மூன்று மடங்காகாகும்
19/09/2024 Duration: 11minடிமென்ஷியாவின் எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியா ஏன் ஏற்டபடுகிறது? இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
அதிகளவான ஆஸ்திரேலியர்கள் எந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர் தெரியுமா?
19/09/2024 Duration: 02minCOVID-19 எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக இழந்த தமது மகிழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலியர்கள் அதிகளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஒருபக்கம் உள்ளபோதிலும் சர்வதேச பயணங்கள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு அப்பால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது மற்றும் வாங்குவது எப்படி?
19/09/2024 Duration: 12minநாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன? எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
-
ஆதிச்ச நல்லூர் அகழாய்வை உலகமறிய செய்தவர்
19/09/2024 Duration: 14minதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுதி வருகிறார்.
-
ஆஸ்திரேலியா 75-வது குடியுரிமை தினத்தை கொண்டாடுகிறது
19/09/2024 Duration: 06minகடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 75-வது ஆஸ்திரேலிய குடியுரிமை தினமாகும். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட விழாக்களில் ஏறக்குறைய ஏழாயிரம் பேர் ஆஸ்திரேலியாவின் புதிய குடிமக்களாக மாறியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகமாகிறது!
19/09/2024 Duration: 09minபெடரல் அரசு முதியோர் பராமரிப்பு துறையில் சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளது - இங்கு மாற்றம் வருமா?
19/09/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/09/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான சாலைகள் எவை தெரியுமா?
18/09/2024 Duration: 03minஆஸ்திரேலியாவில் சாலைவிபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ள மிக ஆபத்தான வீதிகளின் பட்டியலை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI தனது புதிய Crash Index அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம்!
18/09/2024 Duration: 08minதமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறை பயணம் செய்திருந்தார். அது தொடர்பான தொகுப்புடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
“Siddha medicine addresses many issues that modern medicine cannot” - “நவீன மருத்துவம் தீர்க்கமுடியாத பலவற்றை சித்தா மருத்துவம் தீர்க்கிறது"
18/09/2024 Duration: 13minDr Y. R. Manekshah, M.D. (Siddha) is an Associate Professor at the Government Siddha Medical College and Hospital in Palayangottai under the Department of Siddha Medicine, Government of Tamil Nadu. Dr. Manekshah has authored several books on Siddha medicine, covering topics such as infertility, liver diseases, thyroid disorders, heart conditions, kidney ailments, and neurological diseases. In addition to being a renowned Siddha practitioner, he is also a psychotherapist, author, and speaker. - Dr Y R மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சித்தா மருத்துவர் மானக்சா அவர்கள் சித்த மருத்துவத்தில் குழந்தையின்மை, கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் நரம்பியல் நோய்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார்.
-
Blue Mountains-இல் கொலை செய்யப்பட்ட இரு சிறுவர்கள்- தாய் கைது- பின்னணி என்ன?
18/09/2024 Duration: 06minநியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Blue Mountainsஸில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு ஆண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தநிலையில் அவர்களின் தாய் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
உணவும் நீரிழிவு நோயும் - அசட்டையாக இருக்காதீர்கள்!
18/09/2024 Duration: 10minநீரிழிவு நோய் உங்களை அணுகாமல் இருக்க நன்கு சரிவிகித உணவு வகைகளை உட்கொள்வது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்தல் அவசியம். நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது நாம் உண்ணும் உணவு. நீரிழிவு நோயின் பதிப்புகள் அதனை எவ்வாறு வரும் முன் தடுப்பது மற்றும் எவ்வாறு உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.