Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 63:28:43
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • Ozempic & Wegovy மருந்துகளை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படுமா?

    02/09/2024 Duration: 10min

    Ozempic மற்றும் Wegovy மருந்துகள் யாருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன? அதன் செயற்பாடு என்ன? அதில் உள்ள நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் யாவை? மேலும் இந்த மருந்துகள் சிலருக்கு உளநல பிரச்சனையை உருவாக்குவதாக வெளிவந்துள்ள ஆய்வு குறித்தும் விரிவாக உரையாடுகிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராக கடமையாற்றி வரும் டாக்டர் நளாயினி சுகிர்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    02/09/2024 Duration: 09min

    மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை ஏற்படுத்தும் பெரும் அதிர்வலைகள், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் மற்றும் ஃபார்முலா 4 கார் பந்தயம் Vs. தமிழக அரசியல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் வரம்பு அறிவித்துள்ள அரசு - மேலதிக தகவல்!

    02/09/2024 Duration: 08min

    சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் வரம்பு நிர்ணயிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது மேலும் இது 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பவித்ரா வரதலிங்கம் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.

  • நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தொடரும் கடுமையான வானிலை! ஒருவர் பலி!!

    02/09/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • “அப்பா, தந்தையும் தாயுமானவர்”

    01/09/2024 Duration: 06min

    Father’s Day - தந்தையர் தினம் குறித்த சிறப்புப் பதிவு. சிறு வயதில் தனது தாயை இழந்த நிலையில் எளிய பின்னணி கொண்ட தனது தந்தை தங்களுக்காக மறுமணமே செய்யாமல் தன்னையும் தனது தங்கையையும் எப்படி வாழ்வில் உயர்த்தினார் என்று பதிவு செய்கிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் ஒலிபரப்பாளர் R.பாரதிதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். (இந்த பதிவு முதலில் 2020ஆம் ஆண்டு ஒலிபரப்பானது)

  • இந்த வார முக்கிய செய்திகள்

    30/08/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 31 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • ஆண்களை புரிந்துகொள்வது ஏன் தேவை? எப்படி புரிந்துகொள்வது?

    30/08/2024 Duration: 15min

    மருத்துவர் நிவேதிதா மனோகரன் மற்றும் உத்ரா சிம்ஹன் ஆகியோர் ஆண்களின் மன நலம் தொடர்பாக நிகழ்வு ஒன்றை முன்னெடுக்கின்றனர். குடும்ப வன்முறை தொடர்பில் ஆண்களை எப்படி மாற்றத்திற்கு உட்படுத்தலாம் என்று அவர்கள் கலந்துரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • ATO வரி மோசடி தொடர்பில் விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை!

    30/08/2024 Duration: 02min

    ஜூன் 30 முதல் myGov வரி மோசடிகளில் 2 மில்லியன் டொலர்களை விக்டோரியர்கள் இழந்துள்ள பின்னணியில் இதுதொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு காவல் துறையினர் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வீட்டுக்கடன் மீதான நிலையான வட்டி வீதம் குறைப்பு - முழுமையான விவரம்

    30/08/2024 Duration: 10min

    நாட்டில் உள்ள முக்கியமான மூன்று வங்கிகள் வீட்டுக்கடன் மீதான fixed interest rate நிலையான வட்டி வீதத்தை குறைத்துள்ளன. அதோடு சேமிப்பு கணக்குகள் மற்றும் கடன் அட்டை மீதான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன. இதன் பின்னணி என்ன ? இது வீட்டுச்சந்தையில் மாற்றங்களை கொண்டு வருமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    30/08/2024 Duration: 08min

    தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையே விவாதம்; முக்கிய அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன; இலங்கையில் கடவுச்சீட்டுக்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • புற்றுநோய் சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறுகிறது ஒரு புதிய ஆய்வு!

    30/08/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/08/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.

  • தாமதமான அல்லது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை!

    29/08/2024 Duration: 08min

    தாமதமான அல்லது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ஆஸ்திரேலிய விமானப் பயணிகள் இழப்பீடு பெற வழிவகை செய்யும் புதிய விமான போக்குவரத்து சீர்திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • மெல்பன் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணம் தொடர்பில் துணை அமைச்சர் Julian Hill தெரிவித்த கருத்து

    29/08/2024 Duration: 03min

    மெல்பன் Dandenong-இல் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது புகலிடக்கோரிக்கையாளர் தனக்குத்தானே தீவைத்து மரணமடைந்துள்ள பின்னணியில், குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Julian Hill மனோவின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபரின் விடயத்தில் தன்னால் கருத்துக்கூற முடியாது எனத் தெரிவித்த அவர், பொதுவாக சில கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். அதனை அப்படியே வழங்குகிறோம். SBS பஞ்சாபி நிகழ்ச்சியின் Shyna Kalra-வுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

  • விக்டோரியாவில் Airbnb குறுகிய கால தங்குமிடங்களை பயன்படுத்துபவர்களுக்கு புதிய வரி

    29/08/2024 Duration: 02min

    விக்டோரியா மாநிலத்தில் விடுமுறையைக் கழிக்க வருபவர்கள் Airbnb போன்ற குறுகிய கால தங்குமிடங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • “சந்தா பொறியில்” மாட்டியுள்ளீர்களா? மாட்டாமல் இருக்க என்ன செய்யலாம்?

    29/08/2024 Duration: 05min

    சந்தா – Subscription இணைப்பில் இணைவது எளிது; அனால் அதிலிருந்து விலகுவது எளிதா? இப்படியான “சந்தா பொறி” குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Catriona Stirrat. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

  • Superannuation - ஓய்வூதிய நிதி: ஒரு எளிய விளக்கம்

    29/08/2024 Duration: 11min

    Super Members Council எனும் அமைப்பு ATO எனப்படும் ஆஸ்திரேலிய வரி விதிப்பு அலுவலகத்தின் தரவுகளின் அடிப்படையில் ஒரு உண்மையை கண்டறிந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக $1,800 superannuation எனப்படும் ஊதியம் குறைவாக வழங்குவதைக் கண்டறிந்தது. குறிப்பாக பெண்களும், குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு Superannuation சரியாக வழங்கப்படாமல் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த வாரம் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. இந்த செய்தியின் பின்னணியில் superannuation எனப்படும் ஓய்வூதிய நிதி குறித்து விளக்குகிறார் NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • பாராலிம்பிக் போட்டிகள் பாரீசில் கோலாகலமாக துவங்கியது!

    29/08/2024 Duration: 04min

    செய்திகள்: 29 ஆகஸ்ட் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர வேண்டுமா?

    28/08/2024 Duration: 11min

    காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் திருமணத்திற்கு பின் உறவில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமாக உரையாடுகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Educator-ராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • மெல்பனில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணம்!

    28/08/2024 Duration: 02min

    மெல்பனில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து மரணமடைந்ததாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மெல்பன் சிறுமி அம்ரிதா மரணம் தொடர்பில் மற்றுமொரு விசாரணை ஆரம்பம்!

    28/08/2024 Duration: 02min

    மெல்பனில் கடந்த 2022ம் ஆண்டு 8 வயதுச்சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தமை தொடர்பில் Coroners Courtஇல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

page 21 from 25