Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 65:12:53
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
Tamil Treasures: Unveiling the Vibrant Heritage of Mauritius - மொரிசியசு நாட்டில் கோலோச்சும் தமிழ் மொழியும் பண்பாடும்!
11/04/2024 Duration: 16minThangavelu, a Tamil residing in Mauritius, discusses the strong connection of Tamils living on the island nation of Mauritius, situated in the African continent, to the Tamil language and culture. RaySel interviews him. This is a replay of an interview recorded in 2014. - ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மொரிசியசு தீவு நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழி மீதும, தமிழ் பண்பாடு மீதும் கொண்டிருக்கும் பற்று குறித்து விளக்குகிறார் மொரிசியசில் வாழும் தமிழர் தங்கவேலு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு. இந்த நேர்முகம் 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
-
Penny Wong hints at potential recognition of Palestinian statehood? - பாலஸ்தீன அரசை ஆஸ்திரேலியா அங்கீகரிக்குமா?
11/04/2024 Duration: 09minForeign Minister Penny Wong says recognising a Palestinian state is key to long-term peace in the Middle East. Karthik Velu, a writer and எ political commentator explains. Segment produced by Praba Maheswaran. - பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலிக்கவேண்டும் என வெளியுறவு அமைச்சர் Penny Wong பரிந்துரைத்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எழுத்தாளரும் அரசியல் நோக்கரும், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட பல விடையங்களை எழுதிவருபவருமான கார்த்திக் வேலு அவர்கள் விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
நவுருவிற்கு சமீபத்தில் அனுப்பிவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலை!
11/04/2024 Duration: 03minஇந்த ஆண்டின் தொடக்கத்தில் படகு மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர பிராந்தியமொன்றை வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவொன்று, தற்போது நவுறுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளநிலையில், தமது அனுபவங்கள் குறித்து மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தற்கொலை எண்ணங்கள் உருவாவதாகவும் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
152km/h வேகத்தில் சென்ற P-plate ஓட்டுநர்! $1120 அபராதம்; ஓட்டுநர் உரிமமும் ரத்து!!
11/04/2024 Duration: 01minடாஸ்மேனியாவின் Bass Hwy-யில், 152km/h வேகத்தில் சென்ற P-plate ஓட்டுநருக்கு 1121 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
You need to understand children to write for them - சிறுவர்களைப் புரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்காக எழுத முடியும்.
11/04/2024 Duration: 10minInternational Children's Book Day (ICBD) is a yearly event sponsored by the International Board on Books for Young People (IBBY), an international non-profit organization. Founded in 1967, the day is observed on or around Hans Christian Andersen's birthday, April 2. Activities include writing competitions, announcements of book awards and events with authors of children's literature. - பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day) ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை மையமாக வைத்து, குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ மா கோ இளங்கோ அவர்களை, 2017ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு.
-
What jabs should I get before travelling overseas? - வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது அவசியமா?
11/04/2024 Duration: 10minFor travel to a place like Bali in Indonesia, Mills said it was also recommended to get a shot against Hepatitis A, a disease that can cause inflammation of the liver. Hepatitis A is commonly spread through eating or drinking contaminated food and water, or touching dirty surfaces. This feature explains more - உலகின் மற்றைய நாடுகளுக்கு பயணிக்கும் போது தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமா? யாரெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த செய்தியின் பின்னணியை குடும்ப வைத்தியர் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்களின் விளக்கங்களுடன் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
When the river runs dry: megadroughts on the cards in Australia, new report warns - ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் நீடிக்கும் கடுமையான வறட்சி வரக்கூடுமா?
11/04/2024 Duration: 09minAustralia could soon see megadroughts that last for more than 20 years, new modelling suggests. The bleak research from the Australian National University (ANU) and the ARC Centre of Excellence for Climate Extremes has found these droughts could be worse than anything else in recent historical experience. In English : Deborah Groarke ; In Tamil : Selvi. - எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் நீடிக்கும் கடுமையான வறட்சி வரக்கூடும் என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகம் (ANU) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
“ஆஸ்திரேலியாவில் தொழில்துறை புரட்சி போன்ற பெரிய மாற்றம் வரப்போகிறது” - பிரதமர்
11/04/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
R M வீரப்பனின் மூன்று முகங்கள்!
10/04/2024 Duration: 13minமறைந்த தமிழக முதல்வர் MGRன் வலது கரமாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பளாராகவும், திராவிட அரசியல் ஆளுமையாகவும் திகழ்ந்த R.M.வீரப்பன் அவர்கள் காலமானார். அவரின் பல முகங்களை விளக்குகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: விசா நிபந்தனைகளை கடுமையாக்கும் நியூசிலாந்து
10/04/2024 Duration: 02minகுடிவரவாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதையடுத்து நாட்டின் குடிவரவு முறைமையை மறுசீரமைப்பதுடன் சில விசா நிபந்தனைகளை கடுமையாக்கவுள்ளதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Embracing the Joy of Eid: Our Festive Celebrations - ரமலான் பெருவிழாவை நாங்கள் எப்படி கொண்டாடுகிறோம்?
10/04/2024 Duration: 15minYagina Ismail, Ishaq Ismail and Mohamed Badurudeen share their experiences of celebrating Eid festival in Australia. Produced by RaySel. - ரமலான் – ஈகைத் திருநாள் குறித்த சிறப்பு கலந்துரையாடல். பங்கேற்கின்றவர்கள்: மொஹமத் பதுருதீன், இஷாக் இஸ்மாயில் & யஹினா இஸ்மாயில். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இந்திய தேர்தல் களம்: பரப்புரை உலா
10/04/2024 Duration: 10minஇந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய தேர்தல் குறித்த கள நிலவரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் நான்காம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.
-
Average Australian can't afford to buy a house anywhere in the country- new research - ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க வேண்டுமெனில் $164,400 ஆண்டுவருமானம் தேவை!
10/04/2024 Duration: 08minAustralians aiming to buy a home face grim prospects as new research reveals the daunting income required to afford a house in any capital city. Data from the Parliamentary Library, commissioned by the Greens, indicates that to purchase a home, a borrower would need to earn $164,400 annually—nearly two-thirds more than the average salary of $98,218. Renuka Thuraisingham brings the story. - ஒருவர் ஆஸ்திரேலிய நகரமொன்றில் தனக்கான வீட்டை வாங்கி அதற்குரிய mortgage -ஐ செலுத்துவதற்கு 164,400 டொலர்களை ஆண்டுவருமானமாக ஈட்ட வேண்டியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வு ஒன்று கூறுகின்றது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கிழக்கில் தொடரும் போராட்டங்கள்! கண்டுகொள்ளாத அரசு
10/04/2024 Duration: 07minஇலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நெருங்குகின்றது. மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, சிங்கள மயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் காணப்படவில்லை. இதேவேளையில், கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலம் அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நிர்வாக அதிகாரம் கோரி மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டங்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஈகைத் திருநாள் சிறப்புச் செய்தி
09/04/2024 Duration: 07minஈகைத் திருநாள் (ரமலான்) குறித்த சிறப்பு செய்திய வழங்குகிறார்: தமிழ்நாட்டில் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகின்றவரும், சென்னை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச் செயலாளருமான M.A அப்துல்ஹமீது அவர்கள். இது மறு ஒலிபரப்பு. 2014 ஆம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
-
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலிக்கவேண்டும் - வெளியுறவு அமைச்சர்
09/04/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
M. G. R.'s right-hand falls - எம். ஜி. ஆரின் வலது கரம் சாய்ந்தது
09/04/2024 Duration: 10minRenowned Tamil politician R. M. Veerappan (aged 94), has passed away. - தமிழக அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இராம. வீரப்பன் அவர்கள் நேற்று காலமானார்.
-
இந்தியா- ஆஸ்திரேலியா விமானசேவைகள் மேலும் விரிவாக்கப்படுவதாக IndiGo தெரிவிப்பு
09/04/2024 Duration: 02minஇந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான Qantas ஆகியவை இடையிலான codeshare ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் ஆஸ்திரேலியாவின் மேலும் பல நகரங்களுக்குச் செல்வதற்கான வசதி கிடைக்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலாத் தலமொன்றில் இனி பணநோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது
09/04/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான Hamilton தீவு cashless எனப்படுகின்ற முறைக்கு மாறியுள்ளதால் அங்கு இனி பணநோட்டுக்களைப் பயன்படுத்த முடியாது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
AUKUS இரண்டாம் கட்டத்தில் ஜப்பான் இணைந்து கொள்ளுமா?
09/04/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/04/2024) செய்திகள்.